புதன், 16 ஜூலை, 2014

viswaroopam

நேற்று பெங்களூரில் விஸ்வரூபம் படம் பார்த்தேன். கமல்ஹாசனின் பரிணாம வளர்ச்சி நன்கு தெரிகிறது. கமல்ஹாசனின் 50 வருட திரையுலக விழாவின் போதும் , விஸ்வரூபம் ஆரம்பத்தில் இயக்குனர் செல்வராகவன் விலகிய போதும் கமல் சொன்னதன் அர்த்தம் இப்பொழுது எனக்கு புரிகிறது. 'எனக்கு நிறைய நேரம் இல்லை' என்று பொருள்பட சொன்னார். ஒரு உன்னதமான உண்மையான கலைஞன், எப்பொழுதும் தன் படைப்பை மட்டுமே சிந்திக்கும் ஒருவன் தான் கடந்து போகும் பாதையை முன்பே உணர்ந்திருப்பான் என்பது கமல் மூலம் தெளிவாகிறது. கமலின் 'ஹே ராம்' படம் ஒரு மைல் கல் என்றல் விஸ்வரூபம் அதை பல மடங்கு நகர்த்தி செல்கிறது. இது 'மிஷன் இம்ப்பாசிபில்' என்ற ஆங்கில படங்கள் போன்று ஒரு 'பன்னாட்டு உளவு' சம்பந்தப்பட்ட கதை என்றல் அது தவறு என்பேன். இதில் போரினால் வன்முறையால் எவ்வளவு இழப்பை சந்திக்கிறோம், எப்படி கல்வி கற்க முடியாமல் போகிறது, எவ்வாறு சிறுவர்கள் அழிக்கப்படுகிறார்கள், பெண்கள் அடிமைகளாய் ஆகிறார்கள் என்றெல்லாம் கோடிட்டு காண்பிக்கப்படுகிறது. உன்னுடைய ஆக்ரோஷம் மிகுதியானால் உன்னை சுற்றி உள்ள எல்லாமே அதற்கு இரையாகிவிடும். அன்பு மிகுதியானால் உன்னை சுற்றி உள்ள எல்லாமே அதன் முழு சக்தியுடன் இயங்கும். 

Nermai enbadhu yaadhenil

திருப்பூரில் ஒரு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வரும் போது, ஒரு சிறுவன் என்னை ஊதுபத்தி வாங்குமாறு வற்புறுத்தினான். அவனிடம் விலை என்ன என்று கேட்டேன். பத்து ருபாய் என்று சொன்னான். உடனே அவனிடம் நான், எனக்கு பத்தி வேண்டாம், ஐந்து ருபாய் சும்மா வைத்து கொள் என்றேன். அதற்கு அவன் எனக்கு சும்மா எதுவும் வேண்டாம், ஊதுபத்தி வாங்கினால் பணம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினான். எனக்கு அவனுடைய நேர்மை பளிச்சென்று முகத்தில் அறைந்தார் போல் இருந்தது. உடனே அவனிடம் எனக்கு ஊதுபத்தி தேவை இல்லை என்றாலும் ஒரு பாக்கெட் கொடு என்று வாங்கினேன்.

உடனே என் பக்கத்தில் இருந்த என் உறவினர் , "இத பாருங்க இவனுக்கும் . ராசா விற்கும் உள்ள வித்தியாசம்" என்றார். ஒரு பக்கத்தில் இதை போன்று நேர்மையானவர்கள் இருக்கிறார்கள், மறு பக்கத்தில் .ராசா போன்றோர் இருக்கிறார்கள். எனக்கு புரியாதது என்னவென்றால் இவ்வளவு சொத்து சேர்த்து என்ன செய்வார்கள் என்பது தான். வாழ்க்கை என்றால் வெறும் பணம் சேர்ப்பது மட்டும் தானா? அதுவும் உன் தட்டில் இருப்பதை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் இந்த நாட்டு மக்களின் தட்டுக்களில் இருந்தெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது எத்துனை அறிவீனம்? வேற நல்ல விஷையங்களே உங்களுக்குக் கண்ணில் படாதா என்று கேட்க தோணுகிறது.

நேர்மையுடன் இருப்பது சுலபம். அதை செய்வதால் நம்முடைய வாழ்விற்கு வேறு செயல்கள் புரிவதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது.

சனி, 12 பிப்ரவரி, 2011

அனந்த விகடனும், குமுதமும்

நான் என்னுடைய தமிழ் படிக்க தெரிந்த வயது முதல் அனந்த விகடன், குமுதம் என்ற இரு வெகு ஜன பத்திரிக்கைகளை வாசித்து வந்திருக்கிறேன். அப்பொழுது பெரும்பாலும் அதில் வரும் கதைகள் தான் எனக்கு பிடிக்கும். சாண்டில்யன், சுஜாதா, பீ.வீ.ஆர், தேவன், அப்புசாமி சீதாபாட்டி போன்ற தொடர்களை விரும்பி படித்த நினைவு உண்டு. ரா கி ரங்கராஜன் மொழி ஆக்கம் செய்யும் "பாப்பிலான்" என்ற கதை படித்த ஞாபகம் கூட இருக்கிறது. மற்றபடி அதில் வந்த பல சினிமா செய்திகள், உலக செய்திகள் அனைத்தும் இப்போது நினைவில்லை. ஆங்! இடி அமின் பற்றி ஒரு தொடர் படித்த்ததாக எனக்கு ஞாபகம். பிற்பாடு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்றவையும், மற்றும் பல பாலகுமாரனின் கதைகளும் படித்த ஞாபகம் வருகிறது.
Satellite யுகத்தில் இந்த பத்திரிக்கைகள் தங்களுடைய அவதாரத்தை கண்டிப்பாக மாற்றிக்கொண்டே ஆகி விட்டன என்று சொல்ல வேண்டும். அதுவும் கருணாநிதியின் தொலை நோக்குப் பார்வை யினால் வீட்டுக்கு ஒரு மரம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு இலவச டி வீ பெட்டி கிடைத்ததால் மக்களுக்கு படிப்பதற்கு எது நேரம்?
மக்களுக்கு இந்த உலக மயமாக்கப்பட்ட சந்தையிலிருந்து தப்பிக்க எதையோ கிடைக்கும் நேரத்தில் எதையோ பார்க்க வேண்டும். அது வடிவேலு செய்யும் குரங்கு சேட்டையோ அல்லது சன் மியூசிக் இல் ஒவ்வொரு சில மணி நேரமும் நடக்கும் , சன் வெளியிடும் எதாவது ஒரு திரை இசை ஆல்பம். உலகிலேயே முதல் முறையாக என்று சொல்லி சொல்லி நம் தமிழர்கள் கண்டு பிடித்த அறிய பல கண்டுபிடிப்புகளான தனுஷ் , சிம்பு, கமல், ரஜினி, மதுரை கார பசங்க என்று எதாவது ஒரு மாபெரும் படைப்பை "நீங்க எப்படி சார் இந்த மாதிரி யோசிசீங்க?" "நீங்க எப்படி சார இந்த மதுரை மண் வாசத்தை கொண்டு வந்திங்க?" என்று ஆச்சர்யமான தகவல்களுடன் வருகிறார்கள்.
இப்படி போய்க்கொண்டிருக்கிறது தமிழனின் கவலையும் ரசனையும். அப்படி இருக்கும் பொது இந்தஅனந்த விகடன், குமுதம் தன்னுடைய வாசகர் வட்டத்தை எப்படி வைத்துக்கொள்வது? இப்பொழுது வரும் குமுதம் இதழ் almost predictable என்றே சொல்லலாம். இரண்டு பக்கங்கள் ரஜினிபற்றி எதாவது ஒரு ஸ்கூப். இது ஒரு guarantee என்பது நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லும. ரஜினியின் கோடானு கோடி ரசிகர்கலில் ஒரூ 10% படித்தல் கூட போதும் என்பதும் தலைவரைப்பற்றி படிப்பதில் உள்ள ரசிகனின் உள்ளக் கிடக்கையும் தெளிவானது.
குமுதத்தில் வேறு கண்டிப்பாய் வருவது ஜவஹர் பழனியப்பனின் கருணாநிதி அல்லது ரஜினி பற்றிய ஜால்ரா பேட்டி. அதை பேட்டி என்று சொல்வது வருந்ததக்கது. ஏனன்றால் அதில் வரும் கேள்விகள் அப்படி பட்டவை. இன்று உள்ள இரண்டு , மூன்று வயது குழந்தைகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ஏதோ மேதாவித்தனமாய் கேள்வி கேட்பது போன்றும் , அதற்கு கருணாநிதியின் பதில்கள் , My God! இந்த தமிழ் கூறும் நல்லுலகத்தை எப்பொழுது தான் இவர்களிடம் இருந்து காப்பாற்று வாயோ என்று நினைக்க தோன்றுகிறது.
நாட்டின் எரியும் பிரச்சினைகலான 2G spectrum பற்றி அதனை முழுமையை மக்களுக்கு உண்மையை கொண்டு போவதற்கு உரிய திறம் வாய்ந்த செய்தியாளர்கள், தொலை நோக்காளர்கள் , அவர்களுக்கு சரியான பாதை அமைத்து வழி நடத்தும் ஊடகங்கள் இல்லாமல் இருப்பதும், எல்லா வித தொலைக்காட்சி, மீடியா சாதனங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் சார்பாக வைத்திருப்பதும் இந்த நாட்டினை வெள்ளையர் ஆண்ட காலத்தை விட மோசமான ஒரு சர்வதிகார கால கட்டத்தில் நாம் வாழ்வதாகவே எனக்கு படுகிறது. இதில் ஒரே அறுதல் 'திருமாவேலன்" என்ற பத்திரிகையாளர் எழுதும் தொடரில் ஓரளவு ஞாயம் இருப்பதாக எனக்கு படுகிறது. ஞாநி போன்றகளும் இதில் அடக்கம். அனந்த விகடன் ஓரளவு தன்னுடைய இத்தகைய எழுத்தாளர்களால் பத்திரிகை தர்மம் என்பதை கடை பிடிக்கிறது என்றே சொல்வேன்.
லட்ச கணக்காந வாசகர்களை கொண்ட இப்பத்ரிகைகள் தேர்தல் நேரத்தில் தன்னுடைய, விருப்பு, வெறுப்புகளை விட்டு விட்டு, தன்னுடைய வர்த்தக உத்திகளை விட்டு விட்டு, ஒரு முறையேனும் தான் இருப்பது இத்தமிழ் சமூகம் இருப்பதால் தான் என்றும், அவர்களுக்கு நல்ல ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்பதால் நடு நிலையிலிருந்து செய்திகளை வெளியிட்டு மக்களுக்கு தெளிவு பிறக்க வழி வகை செய்ய வேண்டும்.

சனி, 29 ஜனவரி, 2011

தமிழ் நாடு தொகுதி பட்டியல்

உங்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகள் பற்றிய பட்டியல் இந்த வலை தளத்தில் பார்க்கலாம்
http://www.tamilnaduonline.in/Profile/political/constituencies.asp

செவ்வாய், 28 டிசம்பர், 2010

ஹே ராம் படம் சொல்லும் ஒரு பாடம்

இந்த படம் பார்பவர்களை நீண்ட நாள் யோசிக்க வைக்கும். வாழ்க்கையில் எப்படி நாம் ஒரு கருத்தை பிடித்துக்கொண்டு அதிலிருந்து மாற மறுக்கிறோம் என்று புரியும்.
"நான் ரொம்ப நேர்மையானவன், உண்மை எதுவோ அதை மற்றவர்கள் முகத்துக்கு நேரே சொல்வேன்" என்று பெருமையுடன் சொல்பவர்கள் இருக்கிறார்கள்
இப்படி சிறு வயதில் தான் பெருமையாக நினைத்ததை வயதனாலும் அது தான் தன் குணம் என்று கருதி பல சமயங்களில் இடம், பொருள் அறியாமல், மற்றவர்களின் மனம் நோகச் செய்வார்கள். அதனால் மற்றவர்கள் பாதிப்பு அடைவார்கள் என்றாலும் அவர்களுக்கு அந்த முட்டாள்தனமான தன்னை பற்றிய ஒரு கருத்தே முக்கியமாக படும்.
இந்த படத்தில் காந்தி தான் நாடு இரண்டவதர்க்கும், தன் காதல் மனைவி இறப்பதற்கும் காரணம் என்று அவரை கொலை செய்ய புறப்படும் கமலஹாசன், இறுதியில், தன்னுடைய முட்டாள் தனத்தை சம்பவங்களின் தொடர்ச்சியாக உணர்வதாக இருக்கிறது.
சம்பவங்களின் பாதிப்பாலும் மாறாமல் தன் கருத்தே முக்கியம் என்று இருப்பவர்கள் எவ்வளவு வாழ்க்கை அனுபவங்களை உதாசீனப்படுதுகிரர்கள் என்று தெரியும். இது அவர்களை வாழ்க்கை பாடத்தை கற்று கொள்ள இயலாமல் ஆகி விடும்.
வாழ்க்கை என்பதே மாற்றம் உடையது தான். இதில் நான் பிறந்ததில் இருந்தே இப்படித்தான் என்பவர்கள் தன்னை தானே ஏமாற்றி கொள்வது மட்டுமில்லாமல் வாழ்க்கை தத்துவத்தை உணராமலே சென்று விடுகிறார்கள்.
இன்று நீ பார்த்த பார்வை பாடலை வலை தல்லத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். இது ஹே ராம் என்ற கமல் ஹாசன் படத்தில் வரும் ஒரு பாடல். எனக்கு இந்த படம் தமிழில் மிகவும் பிடித்த ஒரு படம். கல்கியின் "அலை ஓசை" படித்தால் சுதந்திரம் பெற்ற காலத்தில் ஒரு தஞ்சாவூர் கிராமமோ திருநெல்வேலி ஆக்ராஹாரமோ எப்படி இருந்தது என்று தெரிய வரும். அதன் பாதிப்பு இந்த படத்தில் வரும் வாலி மற்றும் ஹேமா மாலினி வரும் அய்யங்கார் குடும்பம் வெளிச்சம் போட்டுக் காட்டும். இந்த படம் தமிழில் நிச்சியமாய் ஒரு பரிட்சார்த்த முயற்சி என்று சொல்ல வேண்டும். ஒரே நெருடல் என்ன வென்றால், இதிலும் ஒரு சாதாரண மனிதனின் பார்வை என்றில்லாமல் கமலின் ஹீரோயிசம் என்று சற்று தெரிவது தான். மற்றபடி இது தமிழில் கமல் நடித்த எடுத்த முத்து என்றே சொல்ல வேண்டும்.
நீ பார்த்த பார்வை எனக்கு பிடித்த ஒரு பாடல். அதில் வரும் பியானோ இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் பல முறை முயற்சி செய்து கூட பார்த்திருக்கிறேன்.

சனி, 28 ஆகஸ்ட், 2010

மனது வலிக்கிறது!

இந்த வார குமுதத்தில் ஒரு செய்தி. ஒரு தாய் வறுமையின் காரணமாக தன் இரு மகன்களுடன் தண்டவாளத்தில் தலை வைத்து இறந்து போனாள். அவளுடைய மகன்கள் இருவரும் உயிர் தப்பி விட்டனர். மூத்த மகன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலிசை அழைத்து வந்து பார்க்கையில் இளையவன் எப்போதும் தன் தாய் அருகிலேயே இருப்பவன், அந்த இறந்த தாயின் அருகிலேயே படுத்திருந்தான். மனது வலிக்கிறது.

எந்த மாதிரி உலகத்தை நாம் உருவாக்கி வருகிறோம்? இந்த உலகத்தில் சாமர்த்திய காரர்களுக்கு மட்டும் தான் இடம் உள்ளதா? இன்று நான் சமர்தியசாலியாக ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன். நாளை என்னால் ஏதோ ஒரு காரணத்திற்காக இப்போது போல் இயங்க முடியவில்லை என்றால் இச்சமூகம் என்னை நிராகரித்து விடுமா? அப்படியானால் நான் காலம் முழுமைக்கும் வல்லவனாக இருக்க வேண்டுமா? உலகத்தில் எல்லோரும் இப்படி rat race-இல் இருப்பதால் எவராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனக்கு இருப்பது போதும் என்ற மன நிலை எவருக்கும் இருப்பதில்லை. எல்லாமே, உலகமயமாக்கல் என்ற பெரும் சன்தையினால் மாய வலையினால் மனிதனுடைய வாழ்தலை தொலைத்தாகிவிட்டது. அப்படிப்பட்ட உலகத்தில் ஒரு பெண் வறுமையினால் இறந்து போவது ஒரு நிகழ்வா? அதைப்பற்றி பேசுவது தான் மெச்சத்தக்க செயலா? தனி மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்ற மாபெரும் சொல் எப்பொழுது வயப்படும்?

நான் வேலை பார்க்கும் அமெரிக்க கம்பெனியில் கிறிஸ்துமசின் போது வேலை பார்பவர்களை தொடர்ந்து 10 நாட்கள் கட்டாய விடுப்பில் அனுப்புவது வாடிக்கை. அப்பொழுது மனதில் ஒரு வித நிம்மதி பரவும். இது மற்ற விடுமுறை நாட்களில் கிடைக்காதது. இதற்க்கு காரணம், நாம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் அது மற்றவர்களால் தான் முடியும். உங்களை தொந்தரவு செய்வதற்கு யாருமே இல்லை என்றால் அதை விட சுதந்திரம் வேறு என்ன இருக்க முடியும்?