சனி, 12 பிப்ரவரி, 2011

அனந்த விகடனும், குமுதமும்

நான் என்னுடைய தமிழ் படிக்க தெரிந்த வயது முதல் அனந்த விகடன், குமுதம் என்ற இரு வெகு ஜன பத்திரிக்கைகளை வாசித்து வந்திருக்கிறேன். அப்பொழுது பெரும்பாலும் அதில் வரும் கதைகள் தான் எனக்கு பிடிக்கும். சாண்டில்யன், சுஜாதா, பீ.வீ.ஆர், தேவன், அப்புசாமி சீதாபாட்டி போன்ற தொடர்களை விரும்பி படித்த நினைவு உண்டு. ரா கி ரங்கராஜன் மொழி ஆக்கம் செய்யும் "பாப்பிலான்" என்ற கதை படித்த ஞாபகம் கூட இருக்கிறது. மற்றபடி அதில் வந்த பல சினிமா செய்திகள், உலக செய்திகள் அனைத்தும் இப்போது நினைவில்லை. ஆங்! இடி அமின் பற்றி ஒரு தொடர் படித்த்ததாக எனக்கு ஞாபகம். பிற்பாடு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்றவையும், மற்றும் பல பாலகுமாரனின் கதைகளும் படித்த ஞாபகம் வருகிறது.
Satellite யுகத்தில் இந்த பத்திரிக்கைகள் தங்களுடைய அவதாரத்தை கண்டிப்பாக மாற்றிக்கொண்டே ஆகி விட்டன என்று சொல்ல வேண்டும். அதுவும் கருணாநிதியின் தொலை நோக்குப் பார்வை யினால் வீட்டுக்கு ஒரு மரம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு இலவச டி வீ பெட்டி கிடைத்ததால் மக்களுக்கு படிப்பதற்கு எது நேரம்?
மக்களுக்கு இந்த உலக மயமாக்கப்பட்ட சந்தையிலிருந்து தப்பிக்க எதையோ கிடைக்கும் நேரத்தில் எதையோ பார்க்க வேண்டும். அது வடிவேலு செய்யும் குரங்கு சேட்டையோ அல்லது சன் மியூசிக் இல் ஒவ்வொரு சில மணி நேரமும் நடக்கும் , சன் வெளியிடும் எதாவது ஒரு திரை இசை ஆல்பம். உலகிலேயே முதல் முறையாக என்று சொல்லி சொல்லி நம் தமிழர்கள் கண்டு பிடித்த அறிய பல கண்டுபிடிப்புகளான தனுஷ் , சிம்பு, கமல், ரஜினி, மதுரை கார பசங்க என்று எதாவது ஒரு மாபெரும் படைப்பை "நீங்க எப்படி சார் இந்த மாதிரி யோசிசீங்க?" "நீங்க எப்படி சார இந்த மதுரை மண் வாசத்தை கொண்டு வந்திங்க?" என்று ஆச்சர்யமான தகவல்களுடன் வருகிறார்கள்.
இப்படி போய்க்கொண்டிருக்கிறது தமிழனின் கவலையும் ரசனையும். அப்படி இருக்கும் பொது இந்தஅனந்த விகடன், குமுதம் தன்னுடைய வாசகர் வட்டத்தை எப்படி வைத்துக்கொள்வது? இப்பொழுது வரும் குமுதம் இதழ் almost predictable என்றே சொல்லலாம். இரண்டு பக்கங்கள் ரஜினிபற்றி எதாவது ஒரு ஸ்கூப். இது ஒரு guarantee என்பது நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லும. ரஜினியின் கோடானு கோடி ரசிகர்கலில் ஒரூ 10% படித்தல் கூட போதும் என்பதும் தலைவரைப்பற்றி படிப்பதில் உள்ள ரசிகனின் உள்ளக் கிடக்கையும் தெளிவானது.
குமுதத்தில் வேறு கண்டிப்பாய் வருவது ஜவஹர் பழனியப்பனின் கருணாநிதி அல்லது ரஜினி பற்றிய ஜால்ரா பேட்டி. அதை பேட்டி என்று சொல்வது வருந்ததக்கது. ஏனன்றால் அதில் வரும் கேள்விகள் அப்படி பட்டவை. இன்று உள்ள இரண்டு , மூன்று வயது குழந்தைகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ஏதோ மேதாவித்தனமாய் கேள்வி கேட்பது போன்றும் , அதற்கு கருணாநிதியின் பதில்கள் , My God! இந்த தமிழ் கூறும் நல்லுலகத்தை எப்பொழுது தான் இவர்களிடம் இருந்து காப்பாற்று வாயோ என்று நினைக்க தோன்றுகிறது.
நாட்டின் எரியும் பிரச்சினைகலான 2G spectrum பற்றி அதனை முழுமையை மக்களுக்கு உண்மையை கொண்டு போவதற்கு உரிய திறம் வாய்ந்த செய்தியாளர்கள், தொலை நோக்காளர்கள் , அவர்களுக்கு சரியான பாதை அமைத்து வழி நடத்தும் ஊடகங்கள் இல்லாமல் இருப்பதும், எல்லா வித தொலைக்காட்சி, மீடியா சாதனங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் சார்பாக வைத்திருப்பதும் இந்த நாட்டினை வெள்ளையர் ஆண்ட காலத்தை விட மோசமான ஒரு சர்வதிகார கால கட்டத்தில் நாம் வாழ்வதாகவே எனக்கு படுகிறது. இதில் ஒரே அறுதல் 'திருமாவேலன்" என்ற பத்திரிகையாளர் எழுதும் தொடரில் ஓரளவு ஞாயம் இருப்பதாக எனக்கு படுகிறது. ஞாநி போன்றகளும் இதில் அடக்கம். அனந்த விகடன் ஓரளவு தன்னுடைய இத்தகைய எழுத்தாளர்களால் பத்திரிகை தர்மம் என்பதை கடை பிடிக்கிறது என்றே சொல்வேன்.
லட்ச கணக்காந வாசகர்களை கொண்ட இப்பத்ரிகைகள் தேர்தல் நேரத்தில் தன்னுடைய, விருப்பு, வெறுப்புகளை விட்டு விட்டு, தன்னுடைய வர்த்தக உத்திகளை விட்டு விட்டு, ஒரு முறையேனும் தான் இருப்பது இத்தமிழ் சமூகம் இருப்பதால் தான் என்றும், அவர்களுக்கு நல்ல ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்பதால் நடு நிலையிலிருந்து செய்திகளை வெளியிட்டு மக்களுக்கு தெளிவு பிறக்க வழி வகை செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை: