நேற்று பெங்களூரில் விஸ்வரூபம் படம் பார்த்தேன். கமல்ஹாசனின் பரிணாம வளர்ச்சி நன்கு தெரிகிறது. கமல்ஹாசனின் 50 வருட திரையுலக விழாவின் போதும் , விஸ்வரூபம் ஆரம்பத்தில் இயக்குனர் செல்வராகவன் விலகிய போதும் கமல் சொன்னதன் அர்த்தம் இப்பொழுது எனக்கு புரிகிறது. 'எனக்கு நிறைய நேரம் இல்லை' என்று பொருள்பட சொன்னார். ஒரு உன்னதமான உண்மையான கலைஞன், எப்பொழுதும் தன் படைப்பை மட்டுமே சிந்திக்கும் ஒருவன் தான் கடந்து போகும் பாதையை முன்பே உணர்ந்திருப்பான் என்பது கமல் மூலம் தெளிவாகிறது. கமலின் 'ஹே ராம்' படம் ஒரு மைல் கல் என்றல் விஸ்வரூபம் அதை பல மடங்கு நகர்த்தி செல்கிறது. இது 'மிஷன் இம்ப்பாசிபில்' என்ற ஆங்கில படங்கள் போன்று ஒரு 'பன்னாட்டு உளவு' சம்பந்தப்பட்ட கதை என்றல் அது தவறு என்பேன். இதில் போரினால் வன்முறையால் எவ்வளவு இழப்பை சந்திக்கிறோம், எப்படி கல்வி கற்க முடியாமல் போகிறது, எவ்வாறு சிறுவர்கள் அழிக்கப்படுகிறார்கள், பெண்கள் அடிமைகளாய் ஆகிறார்கள் என்றெல்லாம் கோடிட்டு காண்பிக்கப்படுகிறது. உன்னுடைய ஆக்ரோஷம் மிகுதியானால் உன்னை சுற்றி உள்ள எல்லாமே அதற்கு இரையாகிவிடும். அன்பு மிகுதியானால் உன்னை சுற்றி உள்ள எல்லாமே அதன் முழு சக்தியுடன் இயங்கும்.
புதன், 16 ஜூலை, 2014
Nermai enbadhu yaadhenil
திருப்பூரில் ஒரு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வரும் போது, ஒரு சிறுவன் என்னை ஊதுபத்தி வாங்குமாறு வற்புறுத்தினான். அவனிடம் விலை என்ன என்று கேட்டேன். பத்து ருபாய் என்று சொன்னான். உடனே அவனிடம் நான், எனக்கு பத்தி வேண்டாம், ஐந்து ருபாய் சும்மா வைத்து கொள் என்றேன். அதற்கு அவன் எனக்கு சும்மா எதுவும் வேண்டாம், ஊதுபத்தி வாங்கினால் பணம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினான். எனக்கு அவனுடைய நேர்மை பளிச்சென்று முகத்தில் அறைந்தார் போல் இருந்தது. உடனே அவனிடம் எனக்கு ஊதுபத்தி தேவை இல்லை என்றாலும் ஒரு பாக்கெட் கொடு என்று வாங்கினேன்.
உடனே என் பக்கத்தில் இருந்த என் உறவினர் , "இத பாருங்க இவனுக்கும் ஆ. ராசா விற்கும் உள்ள வித்தியாசம்" என்றார். ஒரு பக்கத்தில் இதை போன்று நேர்மையானவர்கள் இருக்கிறார்கள், மறு பக்கத்தில் ஆ.ராசா போன்றோர் இருக்கிறார்கள். எனக்கு புரியாதது என்னவென்றால் இவ்வளவு சொத்து சேர்த்து என்ன செய்வார்கள் என்பது தான். வாழ்க்கை என்றால் வெறும் பணம் சேர்ப்பது மட்டும் தானா? அதுவும் உன் தட்டில் இருப்பதை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் இந்த நாட்டு மக்களின் தட்டுக்களில் இருந்தெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது எத்துனை அறிவீனம்? வேற நல்ல விஷையங்களே உங்களுக்குக் கண்ணில் படாதா என்று கேட்க தோணுகிறது.
நேர்மையுடன் இருப்பது சுலபம். அதை செய்வதால் நம்முடைய வாழ்விற்கு வேறு செயல்கள் புரிவதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது.
நேர்மையுடன் இருப்பது சுலபம். அதை செய்வதால் நம்முடைய வாழ்விற்கு வேறு செயல்கள் புரிவதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)