புதன், 16 ஜூலை, 2014

Nermai enbadhu yaadhenil

திருப்பூரில் ஒரு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வரும் போது, ஒரு சிறுவன் என்னை ஊதுபத்தி வாங்குமாறு வற்புறுத்தினான். அவனிடம் விலை என்ன என்று கேட்டேன். பத்து ருபாய் என்று சொன்னான். உடனே அவனிடம் நான், எனக்கு பத்தி வேண்டாம், ஐந்து ருபாய் சும்மா வைத்து கொள் என்றேன். அதற்கு அவன் எனக்கு சும்மா எதுவும் வேண்டாம், ஊதுபத்தி வாங்கினால் பணம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினான். எனக்கு அவனுடைய நேர்மை பளிச்சென்று முகத்தில் அறைந்தார் போல் இருந்தது. உடனே அவனிடம் எனக்கு ஊதுபத்தி தேவை இல்லை என்றாலும் ஒரு பாக்கெட் கொடு என்று வாங்கினேன்.

உடனே என் பக்கத்தில் இருந்த என் உறவினர் , "இத பாருங்க இவனுக்கும் . ராசா விற்கும் உள்ள வித்தியாசம்" என்றார். ஒரு பக்கத்தில் இதை போன்று நேர்மையானவர்கள் இருக்கிறார்கள், மறு பக்கத்தில் .ராசா போன்றோர் இருக்கிறார்கள். எனக்கு புரியாதது என்னவென்றால் இவ்வளவு சொத்து சேர்த்து என்ன செய்வார்கள் என்பது தான். வாழ்க்கை என்றால் வெறும் பணம் சேர்ப்பது மட்டும் தானா? அதுவும் உன் தட்டில் இருப்பதை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் இந்த நாட்டு மக்களின் தட்டுக்களில் இருந்தெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது எத்துனை அறிவீனம்? வேற நல்ல விஷையங்களே உங்களுக்குக் கண்ணில் படாதா என்று கேட்க தோணுகிறது.

நேர்மையுடன் இருப்பது சுலபம். அதை செய்வதால் நம்முடைய வாழ்விற்கு வேறு செயல்கள் புரிவதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை: