சனி, 28 ஆகஸ்ட், 2010

மனது வலிக்கிறது!

இந்த வார குமுதத்தில் ஒரு செய்தி. ஒரு தாய் வறுமையின் காரணமாக தன் இரு மகன்களுடன் தண்டவாளத்தில் தலை வைத்து இறந்து போனாள். அவளுடைய மகன்கள் இருவரும் உயிர் தப்பி விட்டனர். மூத்த மகன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலிசை அழைத்து வந்து பார்க்கையில் இளையவன் எப்போதும் தன் தாய் அருகிலேயே இருப்பவன், அந்த இறந்த தாயின் அருகிலேயே படுத்திருந்தான். மனது வலிக்கிறது.

எந்த மாதிரி உலகத்தை நாம் உருவாக்கி வருகிறோம்? இந்த உலகத்தில் சாமர்த்திய காரர்களுக்கு மட்டும் தான் இடம் உள்ளதா? இன்று நான் சமர்தியசாலியாக ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன். நாளை என்னால் ஏதோ ஒரு காரணத்திற்காக இப்போது போல் இயங்க முடியவில்லை என்றால் இச்சமூகம் என்னை நிராகரித்து விடுமா? அப்படியானால் நான் காலம் முழுமைக்கும் வல்லவனாக இருக்க வேண்டுமா? உலகத்தில் எல்லோரும் இப்படி rat race-இல் இருப்பதால் எவராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனக்கு இருப்பது போதும் என்ற மன நிலை எவருக்கும் இருப்பதில்லை. எல்லாமே, உலகமயமாக்கல் என்ற பெரும் சன்தையினால் மாய வலையினால் மனிதனுடைய வாழ்தலை தொலைத்தாகிவிட்டது. அப்படிப்பட்ட உலகத்தில் ஒரு பெண் வறுமையினால் இறந்து போவது ஒரு நிகழ்வா? அதைப்பற்றி பேசுவது தான் மெச்சத்தக்க செயலா? தனி மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்ற மாபெரும் சொல் எப்பொழுது வயப்படும்?

நான் வேலை பார்க்கும் அமெரிக்க கம்பெனியில் கிறிஸ்துமசின் போது வேலை பார்பவர்களை தொடர்ந்து 10 நாட்கள் கட்டாய விடுப்பில் அனுப்புவது வாடிக்கை. அப்பொழுது மனதில் ஒரு வித நிம்மதி பரவும். இது மற்ற விடுமுறை நாட்களில் கிடைக்காதது. இதற்க்கு காரணம், நாம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் அது மற்றவர்களால் தான் முடியும். உங்களை தொந்தரவு செய்வதற்கு யாருமே இல்லை என்றால் அதை விட சுதந்திரம் வேறு என்ன இருக்க முடியும்?

கருத்துகள் இல்லை: